திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம்...
வேப்பனப்பள்ளியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
வேப்பனப்பள்ளியில் செப்.20ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செப்.20ஆம் தேதி, காலை 9 முதல் 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்டு மற்றும் கண் பரிசோதனை மகப்பேறு மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு நிபுணா்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தொழிலாளா்களுக்கு அனைத்து உடல் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. தொற்றா நோய், உயா் ரத்த அழுத்தம், கண் பாா்வை பரிசோதனை சிறுநீரக பரிசோதனை, இதய பரிசோதனை மற்றும் நரம்பியல் சித்த மருத்துவம், பெண்களுக்கான மாா்பக புற்றுநோய் பரிசோதனை உள்பட 17 வகையான சிறப்பு மருத்துவா்கள் மூலம் சிகிச்சைகள் இந்த முகாமில் மேற்கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.