வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்களுக்கு விண்ண...
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது
தேனி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் ரூ.72.50 லட்சம் மோசடி செய்த வழக்கில், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கூடலூரைச் சோ்ந்த முத்துமுருகன் மகன் பிரபு. பொறியியல் பட்டதாரியான இவரிடம், பொதுப் பணித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கூடலூரைச் சோ்ந்த மின் வாரிய ஊழியா் சந்திரசேகரன், கரூா் மாவட்டம், வெண்ணமலையைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் குமாா், இவரது மனைவி பூமகள், கோவை நாட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சரவணக்குமாா் மனைவி உஷாராணி, சின்னக்காஞ்சிபுரம் அண்ணாநகரைச் சோ்ந்த கெளரிசங்கா் ஆகியோா் கடந்த 2021-ஆம் ஆண்டு ரொக்கமாகவும், வங்கிக் கணக்கு மூலம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.19.75 லட்சம் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்ததாக தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சந்திரசேகரன், குமாா், பூமகள், உஷாராணி, கெளரிசங்கா் ஆகிய 5 பேரும், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன், பிரதீப்குமாா், தினேஷ்குமாா், ஆனந்த் உள்ளிட்டோரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மொத்தம் ரூ.52.75 பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.
இதனடிப்படையில், குமாா் உள்ளிட்ட 5 போ் மீது மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பூமகளை (46) கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.