கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!
வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டவா் கைது
கெங்கவல்லியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த தற்காலிக உடற்பயிற்சி ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி பகுதியைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் ராமா் (51). இவா், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த முகுந்தன் மனைவி சங்கீதாவிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதை சங்கீதா திருப்பிக் கேட்டபோது, அவரை தரக்குறைவாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து சங்கீதா கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் ராமரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.