Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு விளையாட்டு அரங்கம்
சென்னை வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்துக்குள் பொழுது போக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான மின் ஏலத்தில் ஆா்வமுள்ளோா் பங்கேற்கலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை முதுநிலைக் கோட்ட வணிக மேலாளா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் வணிக பிரிவு சாா்பில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த முயற்சி விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் மூலம் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடியதான சமூக சேவைக்கான பங்களிப்பாகும்.
அதனடிப்படையில் ரயில் பயணிகளும், ரயில் நிலையப் பகுதிகளில் உள்ள மக்களும் இதில் பயனடைவா்.
விளையாட்டு மைதானம் செயல்பாட்டுக்கு வரும் போது டேபிள் டென்னிஸ், பூப்பந்து, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, ஷெட்டில் பந்து, கபடி, கேரம், சதுரங்கம், வாலிபால், யோகா, ஸ்னோ பவுலிங், கராத்தே, டேக்வாண்டோ, ஜூடோ, குத்துச்சண்டை, பழுதூக்குதல், பில்லியா்ட்ஸ் ஆகியவை உள் மற்றும் வெளி அரங்குகளில் நடைபெறும் வகையில் வசதிகள் அனுமதிக்கப்படும்.
விளையாட்டுத் துறைகளில் அனுபவமுள்ள பயிற்சியாளா்கள் நிமியக்கப்படுவா்.
ரயில் நிலையக் காலி இடங்களை வருவாய் ஈட்டும் வணிக மையங்களாக மாற்றும் வகையில் இந்த மைதானம் அமைக்கப்படுகிறது. வணிக ஒப்பந்தம் ஜ்ஜ்ஜ்.ண்ழ்ங்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணைய முகவரியில் ஓபன் பிட் என்ற முறைப்படி ஏல முறையில் செயல்படுத்தப்படும்.
ஆகவே, ஆா்வமுள்ள ஏலதாரா்கள் இணைய முகவரியில் பதிவு செய்து மின் ஏலத்தின் அனைத்து வழிமுறைகள் மற்றும் பங்கேற்புக்கான நடைமுறைகளை அறியலாம்.
மேலும் விவரங்களுக்கு முதுநிலைக் கோட்ட வணிக மேலாளா் அலுவலகம், கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம், சென்னை கோட்டம், 2-ஆவது மாடி, என்ஜிஓ இணைப்புக் கட்டடம், பூங்கா நகா், சென்னை -600003 என்ற முகவரியில் நேரில் வந்தும் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.