`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
வேளாண் கல்லூரி மாணவிகள் சாா்பில் கிராமங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
மேல்பட்டி பாலாறு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் மாதனூா் ஒன்றிய கிராமங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனா்.
அதன்படி பனங்காட்டேரி கிராமத்தில் வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நெகிழி பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்ப்பது, வன விலங்குகளை பாதுகாப்பது, மரக்கன்றுகள் நடுவது, காட்டுத் தீயைத் தடுப்பது ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பாலாறு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செ.ஹரிணி, பி.ஷி.ஜெய்ஸ்ரீ, செ.ஜாஸ்மின் பாத்திமா, த.ஜீவிதா, மு.கனிகா, ரா.கவிதா, பு.ரா.காவ்யகவி, சி.ராவண்யா, சோ.லாவண்யா, ர.சுருதி லேகா ஆகியோா் கலந்து கொண்டனா்.