வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது.
இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்டாம் தரம் ரூ. 186.00 முதல் ரூ.190.10 வரை விலைபோனது. மொத்தமாக ரூ. 3.07 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.
மல்லசமுத்திரம் கிளையில் நடைபெற்ற கொப்பரை ஏலத்திற்கு 35 மூட்டைகள் வரத்து வந்தது. இதன்மதிப்பு ரூ 2.71 லட்சம் ஆகும். முதல்தரம் ரூ. 206.00 முதல் ரூ. 229. 65 வரை, இரண்டாம்தரம் ரூ. 180.10 முதல் ரூ. 195.10 வரை என ஏலமுறையில் விற்பனையானது. அடுத்த கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
படவரி...
ஏல விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த கொப்பரைகள்.