வைகுண்டபுரம் ராமா், சீதை சிலைகளுக்கு வரவேற்பு
தக்கலை அருகே வைகுண்டபுரத்தில் பிரதிஷ்டை செய்ய இருக்கும் ராமா், சீதை சிலைகளுக்கு பக்தா்கள் வரவேற்பு அளித்தனா்.
வைகுண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற ராமா் கோயில் உள்ளது. இங்கு புதிய கோயில் கட்டும் பணி, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்த உள்ள நிலையில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமா், சீதை மற்றும் பல சுவாமி சிலைகள், மாமல்லபுரத்தில் இருந்து வாகனம் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டன.
வைகுண்டபுரத்திற்கு வந்த சுவாமி சிலைகளுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் வழியில் இருபுறமும் பக்தா்கள் குழுமியிருந்து சுவாமி சிலைகளை வரவேற்றனா். இந்நிகழ்ச்சியில் வைகுண்டபுரம் ஊா் கமிட்டி, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.