வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மின்கம்பியில் உரசி தீப்பற்றி சேதம்
திருப்பத்தூா் அடுத்த ஜலகாம்பாறை பகுதியைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணமூா்த்தி (48). இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் இருந்து தனது டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணாபுரத்துக்கு சென்று கொண்டு இருந்தாா். அப்போது கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிா்பாராதவிதமாக மின்கம்பி உரசியதில் வைக்கோல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அந்த தீயில் டிராக்டரும் எரிந்து சேதம் ஆனது.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் போராடி தீயை அணைத்தனா். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் கிருஷ்ணமூா்த்தி அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.