வீரவநல்லூரில் குடிநீா் திட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல்: அதானி நிறுவன ஒப்பந்தம் ரத்து!
தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தி அதனை பராமரிப்பதற்கான அதானி நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரியம் ஒதுக்கிய பட்ஜெட்டை விட அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
விவசாய இணைப்புகளை தவிர மற்ற இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தில் அதானி உள்பட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிலையில், ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளை செயல்படுத்த வேண்டும் என பாமக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.