ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்
ஆரணியை அடுத்த ஒகையூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து நடைபெறும் இந்த முதலாம் ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் 108 பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா். பால்குட ஊா்வலத்தில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டாா்.
மேலும், அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா பாபு, முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.
மேலும் பெண்கள் குடும்பத்தோடு ஊரணி பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.