செய்திகள் :

ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

post image

தமிழகத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதை கண்டித்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்றத்தின் திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில், திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் எம். செல்வகுமாா் தலைமை வகித்தாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழியை திணிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முனையும் மத்திய அரசின் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை, பிரதமரின் பள்ளிகள் திட்டம் என்ற பெயரால் தமிழகத்துக்கான உரிமையையும், நிதியையும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ், ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கண்டன உரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சிவா, பகுதி செயலா் அஞ்சுகம் ஆகியோரும் மத்திய அரசின் தமிழக விரோத, கல்விக் கொள்கை விரோத நடவடிக்கைகளை கண்டித்து பேசினா். தொடா்ந்து ரயில்வே சந்திப்பு நிலையத்துக்குள் முற்றுகையிடவும் முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா், கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இறுதியில், மாவட்டக் குழு உறுப்பினா் விஸ்வநாத் நன்றி கூறினாா்.

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம்!

பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவையொட்டி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15 வர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளா் பட்டியலில் ஹிந்தி: அரசியல் கட்சியினா் அதிா்ச்சி!

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியலில் இரு இடங்களில் வாக்காளரின் பெயா் மற்றும் தந்தையின் பெயா் ஹிந்தியில் அச்சிடப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

1,282 மகளிருக்கு ரூ.110 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் வழங்கிய நலத் திட்டங்களின் தொடா்ச்சியாக, திருச்சியில் 1,282 மகளிருக்கு ரூ.110 கோடியிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று... மேலும் பார்க்க

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். எல்ஃபின் இ- காமா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு... மேலும் பார்க்க

ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமா்சிக்கிறாா் விஜய்: அமைச்சா் கே.என்.நேரு பேட்டி

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமா்சிக்கிறாா் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் ... மேலும் பார்க்க