பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
ஃபாஸ்டேக் கொண்டு வந்திருக்கும் புதிய கெடுபிடி! பயனர்களே எச்சரிக்கை!!
உங்கள் ஃபாஸ்டேக்-கை ரீசார்ஜ் செய்ய மறந்துவிட்டாலோ அல்லது அதனுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை முறையாகப் பராமரிக்கத் தவறுவதோ, சுங்கச் சாவடிகளில் அபராதங்களை விதிக்க வழிகோலும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) பிப்ரவரி 17 முதல் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் அபராதங்களைத் தவிர்க்க, பயனர்கள் கடுமையாக்கப்பட்டிருக்கும் புதிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) கடந்த ஜனவரி 28ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள் சுங்கச்சாவடியில் டேக் ஸ்கேன் செய்யப்படும் நேரத்துக்கு ஏற்ப இரண்டு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
அதாவது, 60 நிமிடத்துக்கு முன்பு..
சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஹாட் லிஸ்டில் இருந்தாலோ அல்லது குறைந்த இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
அதாவது சுங்கச்சாவடிக்கு வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் ஃபாஸ்ட்டேக்கில் ஏதேனும் பிரச்னை இருந்ருந்தால் கூட பணப்பரிவர்த்தனை ரத்து செய்யப்படும்.
மேலும், 10 நிமிடங்களுக்குப் பிறகு..
ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக், ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டாலோ அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலோகூட பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
அதாவது, ஃபாஸ்ட் டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே கொண்டிருந்தால் "எர்ரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு வாகனத்திற்கு அபராதமாக சுங்கச்சாவடி கட்டணத்தை விட 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த விதிமுறைகளால் பயனர்களுக்கு என்ன பாதிப்பு?
ஃபாஸ்டேக் பொதுவாக ஒயிட் லிஸ்ட்டட் மற்றும் பிளாக் லிஸ்டேட் செய்யப்படும். ஒயிட் லிஸ்டட் என்பது ஆக்டிவாக உள்ள ஃபாஸ்டேக்குகளை குறிக்கும்.
போதுமான பேலன்ஸ் இல்லாமல் இருப்பது, கேஒய்சி செயல்முறையை நிலுவையில்இருப்பது, சரிபார்ப்பு செயல்முறை நிலுவை, வாகனப்பதிவு விவரங்களில் குளறுபடி போன்ற காரணங்களினால் ஃபாஸ்டேக் கணக்கு பிளாக் லிஸ்ட் செய்யப்படலாம்.
அதாவது புதிய விதிகளின்படி,
சுங்கச்சாவடியை அடைவதற்கு 60 நிமிடங்களுக்கு மேல் ஃபாஸ்டேக் செயலற்று இருந்தால் பயனர்கள் கடைசி நேரத்தில் ரீசார்ஜ் செய்து தப்பிக்க முடியாது. இருப்பினும், பரிவர்த்தனை முயற்சியின் 10 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்தால், அபராதத்திற்குப் பதிலாக நிலையான சுங்கக் கட்டணத்தை மட்டுமே செலுத்த பயனர் அனுமதிக்கலாம்.
அதாவது, பாஸ்டேக் பயனர்கள், அதனை ஒழுங்காக நிர்வாகிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோல பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக 70 நிமிட சலுகைக் காலம் வழங்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதுதான். இதனால் சுங்கச்சாவடிகளில் விரைவான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்றாலும் இது பற்றி அறியாத பயனர்கள் கூடுதல் அபராதத்தை செலுத்தும் நிலைக்குத்தள்ளப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அபராதங்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பு, பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பயனர்களின் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்துஅதனை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சுங்கச்சாவடிகளை அடைவதற்கு முன்பு, நமது பாஸ்டேக் நிலையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.