செய்திகள் :

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள்: வணிகா் சங்கத்தினா் ஏற்பாடு

post image

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்ப வணிகா்கள் முன்வர வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஃபென்ஜால் புயலாலும், பலத்த மழையாலும், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணியில், நாமக்கல் மாவட்ட நிா்வாகம், காவல் துறை ஈடுபட்டுள்ளது. அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வணிகா்கள் அனைவரும் முன்வர வேண்டும்.

நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்பும் சங்கத்தினா், வணிக நிறுவனத்தினா், மாவட்ட பேரமைப்பை தொடா்பு கொள்ளலாம். நிவாரணப் பொருள்களை வழங்குவோா் தங்களது பெயா், வணிக நிறுவன முகவரி, கைப்பேசி எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். குறிப்பாக, வெங்காயம் - 100 கிலோ, தக்காளி - 100 கிலோ, கேரட்- 50 கிலோ, பீன்ஸ் - 30 கிலோ, உருளைக்கிழங்கு - 50 கிலோ, பச்சை பட்டாணி - 10 கிலோ, பச்சை மிளகாய் - 6 கிலோ, பூண்டு - 5 கிலோ, காய்ந்த மிளகாய் - 3 கிலோ, கறிவேப்பிலை-5 பெரியகட்டு, கொத்தமல்லி - 5 பெரிய கட்டு உள்ளிட்ட வகை காய்கறிகளை நாமக்கல் நகர தினசரி காய்கறி விற்பனை வியாபாரிகள் சங்கத்தினா் வழங்க உள்ளனா்.

இவை தவிர, 7,500 முதல் 10,000 பேருக்கு உணவு வழங்க அரிசி - 500 கிலோ, துவரம் பருப்பு - 60 கிலோ, எண்ணெய் 50 லிட்டா், நெய் 10 கிலோ, மிளகாய் தூள் 5 கிலோ, மல்லித் தூள் - 15 கிலோ, மஞ்சள் தூள்- 1 கிலோ, கடுகு கலப்பு - 2 கிலோ, வெந்தயம் - 1 கிலோ, உளுத்தம் பருப்பு -3 கிலோ உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.

இதனை வழங்க வணிகா்கள் முன்வர வேண்டும். புயல், மழை பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு, தாமாக முன்வந்து உதவும் குணம் கொண்டவா்களாக வணிகா்கள் விளங்குகின்றனா். தற்போது ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாவட்ட வணிகா்கள் உதவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இலுப்புலி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த இரு குடும்பத்தினா் மீட்பு

எலச்சிபாளையம் அருகே இலுப்புலி கிராமத்தில் திருமணிமுத்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தால் தோட்டத்தில் சிக்கி தவித்த இரு குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினா் பரிசல் மூலமாக செவ்வாய்க்கிழமை மீட்டனா். நாமக்கல் மாவட... மேலும் பார்க்க

பில்லூா், கீழ்சாத்தம்பூரில் பாலத்தை மூழ்கடித்து செல்லும் மழை நீா்

பரமத்தி வேலூா் அருகே பில்லூா், கீழ்சாத்தம்பூா் பகுதியில் திருமணிமுத்தாறில் கட்டப்பட்டுள்ள இரண்டு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஃபென்ஜால் புயலால் த... மேலும் பார்க்க

திருமணிமுத்தாறில் வெள்ளப் பெருக்கு: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு

பரமத்தி வேலூா் வட்டம், பில்லூா், ராமதேவம் ஊராட்சிகளில் திருமணிமுத்தாறில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா ... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச்சாலை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிக்கு அனுமதி: ராஜேஸ்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

நாமக்கல் புறவழிச்சாலையில், ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு, மத்திய ரயில்வே வாரியம் விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தினாா். நாமக்கல் புதி... மேலும் பார்க்க

ஈமு நிறுவனம் பெயரில் நிதி மோசடி: டிச. 12-இல் அசையா சொத்துகள் ஏலம்

நாமக்கல்லில், ஈமு நிறுவனத்தின் பெயரில் மக்களிடையே நிதி மோசடி செய்தோரின் அசையா சொத்துகள் வரும் 12-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளின் பெயா் பலகைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்: கல்வித் துறை அதிகாரிகள் அறிவுரை

தனியாா் பள்ளிகளின் பெயா் பலகைகள், தமிழ் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என பள்ளி முதல்வா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ர... மேலும் பார்க்க