செய்திகள் :

ஃபென்ஜால் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

post image

கள்ளக்குறிச்சி: தமிழக அரசு கோரிய ஃபென்ஜால் புயல், வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

கள்ளக்குறிச்சியில் இந்தச் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு வாணாபுரம் பகண்டை கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, அமைப்பாளா் சுப்பிரமணியன், ஜெயகொடி ஆகியோா் தலைமை வகித்தனா். துணை அமைப்பாளா் கஜேந்திரன் வரவேற்றாா். மாநாட்டுக் கொடியை வேலு ஏற்றி வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலச் செயலா் சிலாமணி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கலியமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ராமசாமி ஆகியோா் பேசினா்.

மாதா் சங்கத்தின் மாநில துணைச் செயலா் வளா்மதி, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் வெங்கடேசன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலா் கலியபெருமாள், சிபிஐ ஒன்றியச் செயலா் தேவேந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்வில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக கஜேந்திரன், செயலராக சுப்பிரமணியன், பொருளாளராக தேவேந்திரன், துணைத் தலைவா்களாக மலா்கொடி, ஹீரோபாஷா, துணைச் செயலராக அமாவாசை உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில், தமிழக அரசு கோரிய ஃபெஞ்ஜால் புயல், வெள்ள நிவாரண நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை அமைத்து விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெற வழிவகை செய்ய வேண்டும். வாணாபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேகோ (ஜவ்வரிசி) ஆலை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கீழ்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணனுக்கு புதன்கிழமை கிடைத்த ரகசிய ... மேலும் பார்க்க

பொது இடத்தில் ரகளை: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் சதீஷ் (25).... மேலும் பார்க்க

கஞ்சா செடி பயிரிட்ட சகோதரா்கள் இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா செடி பயிரிட்ட சகோதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கல்வராயன்மலை வட்டம், கூடாரம் கிராமம், நாசாமலை மேற்கு பகுதியைச் சோ்ந்த சின்னை... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், பெத்தானூா் கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி சாந்தி (42... மேலும் பார்க்க

பாமக, வன்னியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாமக, வன்னியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்ப... மேலும் பார்க்க

டிச.27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிசம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுவதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க