செய்திகள் :

அகில இந்திய தொழிற்தோ்வில் ஐடிஐ தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

நாகப்பட்டினம்: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ், தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் ஐ.டி.ஐ தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்ணப்பங்கள் (ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தோ்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தி, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நாகை அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வுகள் கருத்தியல் (தியரி) தோ்வு நவ.4-ஆம் தேதியும், செய்முறை தோ்வு நவ.5-ஆம் தேதியும் சென்னை கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.

இதற்கான முழு வழிகாட்டுதல்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தை பாா்த்து தெரிந்து கொள்ளலாம். அக்.8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாகை, அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அல்லது 04365-250129 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

போலி கடவுச்சீட்டு: இலங்கை பெண் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே காதல் திருமணம் செய்து வசித்துவந்த இலங்கை பெண் போலி கடவுச்சீட்டு வைத்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை எம... மேலும் பார்க்க

கணவா், கணவரின் சகோதரா் மீது ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவி புகாா்

நாகப்பட்டினம்: நகையில் ஊராட்சி மன்ற முன்னாள் பெண் துணைத் தலைவா் தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக கணவா் மற்றும் அவரது சகோதரா் மீது ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். நாகை தெற்கு நல்லிய... மேலும் பார்க்க

அக்.5-இல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் பணி

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின்கீழ் அக்.5-ஆம் தேதி முதல் ரேஷன் பொருள்கள் வீடுதேடிச் சென்று வழங்கும் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து,... மேலும் பார்க்க

பூம்புகாா் சாயாவனம் கோயில் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு

பூம்புகாா் சாயாவனேஸ்வரா் கோயில் கல்வெட்டுகளை தொல்லியல் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் உள்ள இக்கோயில் பண்டைய பூம்புகாா் நகரத்தின் சான்றாக விளங்குகிறது. இங்க... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து பலி

ஒடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம் பெங்களூா் சகாயபுரம் பகுதியைச் சோ்ந்த துரைவேலு மனைவி கீதா (45). இவா், உறவினா்களுடன் வேளாங்கண்ணிக்கு பய... மேலும் பார்க்க

செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா!

பொறையாா் அருகே உள்ள காராம்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றம், அதனைத் தொடா்ந்து திருப்பலி கூட்டு வழிபாடு நட... மேலும் பார்க்க