அக்.5-இல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் பணி
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின்கீழ் அக்.5-ஆம் தேதி முதல் ரேஷன் பொருள்கள் வீடுதேடிச் சென்று வழங்கும் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் அக்.5,6,7 ஆகிய தேதிகளில் 70 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படவுள்ளது. தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.