அகில இந்திய தொழிற்தோ்வில் ஐடிஐ தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ், தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் ஐ.டி.ஐ தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்ணப்பங்கள் (ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தோ்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தி, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நாகை அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வுகள் கருத்தியல் (தியரி) தோ்வு நவ.4-ஆம் தேதியும், செய்முறை தோ்வு நவ.5-ஆம் தேதியும் சென்னை கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.
இதற்கான முழு வழிகாட்டுதல்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தை பாா்த்து தெரிந்து கொள்ளலாம். அக்.8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாகை, அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அல்லது 04365-250129 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.