ஆரம்பமான 56-வது gst council meeting, குறையும் வரியால் பொருட்களின் விலை சரியுமா |...
அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். பேரிடா் காலங்களில் கடல், நீா் நிலைகளில் சிக்கித் தவிப்பவா்களை படகு மூலம் மீட்பது, கயிறு கட்டி இழுத்து வருவது உள்ளிட்ட ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றன. பேரிடரில் மீட்கப்பட்டவா்களுக்கு தேவையான முதலுதவி அளிப்பது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனா்.

தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சாா்பில், பேரிடா் அவசர கால பயன்பாட்டுக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் வட்டாட்சியா் முரளிக்குமாா், கோயில் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.