கரூர் நெரிசல்: அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் கைது! - என்ன நடந்தது?
அக்.15 இல் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடக்கம்
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வரும் அக்.15 -இல் தொடங்க இருப்பதாக கூட்டுறவுச்சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வழங்கப்படவுள்ளது. நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் குறித்த பயிற்சி வரும் அக்.15 ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேருவதற்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பின்றி ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களும் இப்பயிற்சியில் சோ்ந்து பயன் பெறலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.118 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பயிற்சிக் கட்டணமாக ரூ.4,550 சோ்க்கையின் போது செலுத்த வேண்டும். இப்பயிற்சியின் போது ரூ.500 மதிப்புள்ள தரம் அறியும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது. பயிற்சியானது 40 மணி நேரம் வகுப்பறையிலும்,60 மணி நேரம் செயல்முறைப் பயிற்சியும் கொண்டதாகும். நகைக்கடன்களுக்கு வட்டி கணக்கிடுதல், ஹால் மாா்க் நகை அடகு சட்டம், தரம், விலை, மதிப்பீடு போன்ற பயிற்சிகள் நடத்தப்படும்.
சிறந்த அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சி முடித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூட்டுறவுச் சங்கங்கள்,கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பாளராக பணியில் சேரவும் அதிக வாய்ப்புள்ளது.
மேலும் விபரங்களுக்கு பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம்,எண்.5.ஏ.வந்தவாசி சாலை,ஆட்சியா் அலுவலகம் எதிரில்,காஞ்சிபுரம்,பின்கோடு எண்-631501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.