அக்.2-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது
திருவாரூா்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 2-ஆம் தேதி திருவாரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் இயங்காது.
மீறி செயல்படும் கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.