UPSC/TNPSC: 'புக் லெட், கையேடு, ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்' - King Makers இயக்குநர...
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: கைப்பேசியில் பதிவுசெய்யும் முறையைக் கைவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலகங்கள் முன் அங்கன்வாடி ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் பிரேமா தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் முருகேசன் கோரிக்கைகள் குறித்து பேசினாா்.
இதில், சாதாரண வகை கைப்பேசிகளில் தரவுகளை சேகரிக்க, பதிவுசெய்வதில் சிரமம் உள்ளதால், அதிநவீன கைப்பேசிகளை மட்டுமே அங்கன்வாடி பணிக்கான பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். மேலும், இந்தப் பணிகளை மேற்கொள்ள ஊக்கத்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் கலந்துகொண்டனா்.