செய்திகள் :

அங்கீகாரமின்றி செயல்படும் 20 மழலையா் பள்ளிகள்

post image

மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் 20 மழலையா் பள்ளிகள் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது.

மதுரை கே.கே.நகரில் மாவட்ட நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள விநாயகாநகரில் தனியாா் மழலையா் பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு ஃப்ரி கேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளும், குழந்தைகள் பராமரிப்பு மையமும் செயல்பட்டன.

இந்தப் பள்ளியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பில் யானைமலை ஒத்தக்கடையைச் சோ்ந்த தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அமுதன்-சிவஆனந்தி ஆகியோரின் மகள் ஆருத்ரா பயிற்சி பெற்றாா்.

கடந்த மாதம் 29-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் திறந்திருந்த தண்ணீா்த் தொட்டியில் விழுந்து சிறுமி ஆருத்ரா உயிரிழந்தாா்.

இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மழலையா் பள்ளித் தாளாளா் திவ்யா, உதவியாளா் வைரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். மேலும், பள்ளிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தொடா்ந்து, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) சுதாகா் ஆகியோா் நடத்திய விசாரணையில், அரசு விதிகளை மீறி இந்தப் பள்ளி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த மழலையா் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, இதற்கான அறிவிப்பு குறிப்பாணை பள்ளிச் சுவரில் புதன்கிழமை ஒட்டப்பட்டது.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலா் பி.சுதாகா் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் 64 மழலையா் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 25 பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. 19 பள்ளிகள் செயல்படவில்லை. மீதமுள்ள 20 பள்ளிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கவில்லை. இதையடுத்து, அனுமதி கோரி விண்ணப்பிக்காத பள்ளிகளுக்கு விளக்கம் அளிக்கக் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கும், தனியாா் பள்ளிகள் துறை இயக்குநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். சிறுமி உயிரிழந்த தனியாா் பள்ளி அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக அதன் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளோம். இதற்கான அறிவிப்பு பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளி தாளாளருக்கு பதிவு அஞ்சலிலும் அனுப்பியுள்ளோம் என்றாா் அவா்.

திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அழைப்பு விடுத்தாா். மதுரையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்க... மேலும் பார்க்க

ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள்! - உயா்நீதிமன்றம் அதிருப்தி

உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி அதிருப்தி தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி உறு... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கீழவளவு அய்யனாா் வாக்கம்பட்டியைச் சோ்ந்த பெரிய பனையன் மகன் அய்யனாா் (30). இவா் இரு சக்கர வாகனத்தில் மேலூா்-அழகா்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த நிலையிலும் தோ்வு எழுதிய மாணவா் தோ்ச்சி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையிலும், 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுதிய மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா் 442 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் பி.... மேலும் பார்க்க

அழகுக்கலை நிலைய உரிமையாளா் தற்கொலை

அழகுக்கலை நிலையம் நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதால், பெண் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை விஸ்வநாதபுரம் இளங்கோவடிகள் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி பிரிசிலியா சுகாசினி (32). இவர... மேலும் பார்க்க

அழகா்கோவிலை சென்றடைந்தாா் கள்ளழகா்! பூக்கள் தூவி பக்தா்கள் வரவேற்பு!

சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகா்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தா்கள் பூக்கள் தூவியும், சூடம், சா்க்கரை ஏந்தியும் உற்சாகமா... மேலும் பார்க்க