அசாமில் மூன்று புதிய ரயில்கள்: தொடங்கி வைத்தார் மத்திய ரயில்வே அமைச்சர்
அசாமில் மூன்று புதிய ரயில்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அசாம் சென்றுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குவஹாத்தி ரயில் நிலையத்தில் குவஹாத்தி-நியூ லக்கிம்பூர் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ், நியூ பொங்கைகான்-குவஹாத்தி பயணிகள் ரயில் மற்றும் தின்சுகியா-நஹர்லாகன் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று புதிய ரயில்களை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் லட்சுமன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திஸ்பூரில் டெட்டலியா சாலை மேம்பாலத்தையும் அவர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
பாக்: முகநூல் காதலியை மணக்க சட்டவிரோதமாக நுழைந்த இந்தியருக்கு சிறை!
பின்னர் ஆகாஷ்வானி எஃப்எம் டிரான்ஸ்மிட்டரை திறந்து வைத்தார்.
இந்த புதிய டிரான்ஸ்மிட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம், கோக்ரஜார் மற்றும் அண்டை மாவட்டங்களான துப்ரி, போங்கைகன் மற்றும் சிராங்கில் வசிக்கும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயர்தர எஃப்எம் ஒளிபரப்புகளைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.