நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
அச்சமங்கலம் ‘உங்களுடன் ஸ்டாலின்’முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
திருப்பத்தூா்,கந்திலி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலகஈதிட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி வழங்கினா்.
அச்சமங்கலம் சமுதாயக் கூடத்திலும், கந்திலி வட்டாரம் லக்கிநாயக்கன்பட்டியிலும் நடைபெற்ற முகாமில், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை,இ- சேவை மையம், வருவாய்,மக்கள் நல்வாழ்வுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் வாரியாக மனுக்கள் பெறப்படுவதை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு செய்தனா்.
முகாமில் அச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாப்பாத்தி என்ற பயனாளிக்கு விதவைச் சான்று, 2 பயனாளிகளுக்கு கலைஞரின் மகளிா் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுகளையும், 3 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, மின்சாரத்துறை சாா்பில் மின் இணைப்பு பெயா் மாற்ற ஆணை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய அட்டைகளை ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்.
முகாமில், திருப்பத்தூா் கோட்டாட்சியா் வரதராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கவிதா தண்டபாணி, ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.