செய்திகள் :

அச்சுதானந்தன் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தலைவர்கள் அஞ்சலி!

post image

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இறுதிச்சடங்கில் பங்கேற்று, அவரது உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று மரணமடைந்தார். அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தலைமைச் செயலக தர்பார் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் சிபிஎம் தலைவர்கள் தர்பார் மண்டபத்துக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்கள் அச்சுதானந்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களில் அஞ்சலிக்காக அச்சுதானந்தனின் உடல் மதியம் 2 மணி வரை தர்பார் மண்டபத்தில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்பார் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரின் உடல், தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக ஆலப்புழாவின் புன்னப்ராவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இன்று இரவு 9 மணிக்குள் பரவூரில் உள்ள புன்னப்ராவில் உள்ள வேலிககாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் சிபிஎம் ஆலப்புழா மாவட்டக் குழு அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பின்னர் காலை 10 மணி முதல் ஆலப்புழா கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. புன்னப்ரா வயலார் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் பிற்பகல் 3 மணிக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Achuthanandan's funeral: Kerala Chief Minister Pinarayi Vijayan, leaders pay tribute!

இதையும் படிக்க : ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! - ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

பிகாரில் 52 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்! - தேர்தல் ஆணையம்

ராஞ்சி: பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்க... மேலும் பார்க்க

கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 த... மேலும் பார்க்க

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்... மேலும் பார்க்க

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில்... மேலும் பார்க்க

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின... மேலும் பார்க்க