செய்திகள் :

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

post image

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய தகுதியற்றவர் எனக் கண்டறியப்பட்டால், அந்த நபரின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 24ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் காரணமாக, வாக்காளர்கள் பெரிய அளவில் நீக்கப்படலாம் என்றும், அதனை எதிர்த்தும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஆதார் அட்டையானது குடியுரிமையை நிறுவாததால், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆவணமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், ஆதார் அடையாளச் சான்றாக மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சிறப்பு திவிர திருத்தப் பணிகளில் நோக்கமே, தகுதியற்ற நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் தேர்தலின் தூய்மையை அதிகரிப்பதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் யாருக்கு சாதகம்?! கார்கள், விஸ்கி விலை குறையுமா?

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறார். பிரிட்டனில் மேற்கொள்ளப்படும் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களால் யாரு... மேலும் பார்க்க

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

நமது நிருபர்உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க