செய்திகள் :

'கேப்டன் பிரபாகரன்' ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு; இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பகிர்ந்த நினைவுகள்

post image

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100வது திரைப்படமான இது அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்படுகிறது.

இப்படத்துக்குப் பிறகே 'கேப்டன் விஜயகாந்த்' என்று அழைக்கப்பட்டார். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலிஸாகிறது.

கேப்டன் பிரபாகரன்

இதுகுறித்துப் பேசியிருக்கும் அப்படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, " ‘கேப்டன் பிரபாகரன்’ எடுத்து 34 ஆண்டுகள் ஆகிடுச்சு. 'இப்போ ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால் மக்கள் பார்ப்பாங்களா?' எனச் சந்தேகம் இருந்தது. ஆனால், படத்தை மறுபடியும் பார்த்தபோது இன்னைக்கும் அவ்வளவு புதுசா இருந்துச்சு.

இன்னைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தால்கூட அப்படியொரு ஸ்டண்ட் காட்சிகளை எடுக்க முடியாது. அவ்வளவு அற்பணிப்புடன் மிகப்பெரிய ஸ்டண்ட காட்சிகளில் எல்லாம் விஜயகாந்த் சாரே செய்திருப்பார். அடிபட்டால் கூட அதைக் காட்டிக் கொள்ளாமல் அடுத்தடுத்தக் காட்சிக்குத் தயாராகிவிடுவார். அதனால்தான் இன்னைக்கும் 'கேப்டன் பிரபாகரன்' ரீ-ரிலீஸுக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்புக் கிடைக்கிறது.

விஜயகாந்த் - ஆர்.கே செல்வமணி

இன்னைக்குப் படத்தைக் கூவி கூவி விற்கிறார்கள். ஆனால். இந்தப் படம் ரீ-ரிலீஸ் என அறிவிச்ச உடனே திரைப்பட விநியோகஸ்தர்கள் உரிமம் கேட்டு போன் மேல் போன் அடிக்கிறார்கள். அதுதான் விஜயகாந்த் சாரின் மேல் உள்ள மதிப்பு.

அந்தப் படத்தின் இறுதிக் காட்சியை எடுக்கும்போதுதான் விஜய பிரபாகரன் பிறந்தார். விடுதலைப் புலிகள் கேப்டன் பிரபாகரன் நினைவாக தனது மகனுக்கு 'விஜய பிரபாகரன்' என பெயர் வைத்தார், படத்திற்கும் அதே பெயரை வைத்தார் விஜயகாந்த் சார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது பிறந்த விஜய பிரபாகரன், இன்னைக்கு அந்தப் படத்தை தன் கையால் ரீ-ரிலீஸ் செய்யப்போகிறார் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Fahadh Faasil: "எனக்குப் பிடித்த டாப் 5 படங்கள் இவைதான்" - பகத் பாசில் சொன்ன சூப்பர் லிஸ்ட்

இயக்குநர் சுதிஷ் சங்கர்இயக்கத்தில் பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'மாரீசன்'. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இலகுவான இத்திரைப்படம் இந்த வாரம் ஜூலை 25ம் தேதி வெள்ளிக்க... மேலும் பார்க்க

மாரீசன் விமர்சனம்: ஃபார்மல் டிரஸ் வடிவேலு, பக்கா திருடர் பகத் பாசில்; இந்தப் பயணம் எப்படி?

சிறுசிறு திருட்டுகள் செய்யும் திருடரான தயாளன் (பகத் பாசில்), பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து விடுதலையாகிறார். மீண்டும் திருடுவதற்காக நாகர்கோவிலுள்ள பூட்டிய வீடு ஒன்றில் நுழைய, அங்கே ஓர் அறையில் ... மேலும் பார்க்க

D54: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் தனுஷ்; பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள். வருகிற 28ம் தேதி தனுஷின் பிறந்த நாள் வருவதால், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ரெடியாகி வருகின்றனர்.தனுஷின் வளர்ச்சியில் அவரது ரசிகர்களின் பங்கு முக்கியமானது... மேலும் பார்க்க