எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
நோயாளி - நாயகி: ஸ்பெயினின் வரலாற்று வெற்றிக்கு உதவிய பொன்மட்டி!
மகளிருக்கான யூரோ சாம்பியன்ஷிப்பில் ஸ்பெயினை முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற கால்பந்து வீராங்கனை அய்டானா பொன்மட்டியின் வாழ்க்கை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் லெட்ஸிக்ரண்ட் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜெர்மனியும் ஸ்பெயின் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 90 நிமிஷங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் கூடுதல் நேரத்தில் 113-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் அணியின் அய்டானா பொன்மட்டி கோல் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முதல்முறையாக ஸ்பெயின் முன்னேறியுள்ளது. கடைசி 6 போடிகளாக கோல் அடிக்காமல் இருந்த பொன்மட்டியின் சாபமும் இந்தப் போட்டியில் முடிவுக்கு வந்தது.
இந்தத் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக மூளைக் காயச்சலால் பொன்மட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
போட்டிக்குப் பிறகு பொன்மட்டிபேசியதாவது:
என்னுடைய சிறந்ததை இந்தப் போட்டியில் அளிக்க மிகவும் விரும்பினேன். என்னை சிறப்பான உடல்நலத்துடன் இந்தப் போட்டியில் பங்கேற்க உதவியவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். ஏனெனில், என்னால் இதை தனியாளாகச் செய்திருக்க முடியாது.
விதியின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. கடின உழைப்பு, என மனநிலை, எனக்கு உதவியவர்களை மட்டுமே நம்புகிறேன்.
நாளைக்கு இங்கிலாந்து குறித்து சிந்திக்கலாம். இப்போதைக்கு இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்றார்.
கடந்த சீசனில் மகளிருக்கான பேலன் தோர் (தங்கப் பந்து) விருதை பொன்மட்டி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.