எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
கோலாகலமாகத் தொடங்கும் சூப்பர் சிங்கர் சீசன் - 11: நடுவர்கள் யார்?
சூப்பர் சிங்கர் 11வது சீசன் கூடிய விரைவில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
தமிழகத்தின் பிரமாண்ட குரலுக்கான தேடல் என்ற வரியுடன் ஆரம்பிக்கப்பட்ட சீனியர் சீசன், தமிழகத்தின் செல்லக் குரலுக்கான என்ற வரியுடன் தொடங்கப்பட்ட ஜூனியர் சீசன் என இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 20 சீசன்களில் பங்குபெற்று பாடர்கள் ஆனவர்கள் ஏராளம்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று பாடியவர்கள், தற்போது வெள்ளித் திரையில் வெற்றிகரமான பின்னணிப் பாடகர்களாக வலம் வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குடும்பத் தலைவிகள், முதியோர், இளைய தலைமுறையினர் என அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், ‘சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11’ கூடிய விரைவில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் 10வது சீசன் வரை சீனியர், ஜூனியர் என இரு சீசன்களிலும் வெற்றிப் பெற்ற போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த புதிய 11வது சீசனில் நடுவர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக நடுவராக பங்கேற்கும் பாடகி அனுராதாவுடன், பாடகர் உன்னி கிருஷ்ணன், இசையமைப்பாளர் தமன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நகைச்சுவையாக அவர்கள் தொகுத்து வழங்கும் விதம் பலரைக் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓடிடியில் 3 பிஎச்கே எப்போது?