கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூ...
தேர்தல் ஆணைய மோசடியை கையும் களவுமாகப் பிடித்துள்ளோம்.. தப்பிக்க முடியாது: ராகுல்
கர்நாடகத்தில் தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்ததற்கான 100 சதவீதம் ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்க அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் ஜூலை 21 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. இதனிடையே கர்நாடகத்தில் தேர்தல் மோசடி நடைபெற்றதற்கு 100 சதவித ஆதாரம் தன்னிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது,
தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையமாகச் செயல்படவில்லை, அதன் வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்துள்ளது. 90 சதவிகிதம் அல்ல, 100 சதவிகிதம் உறுதியான ஆதாரம் தனது கட்சியிடம் உள்ளது.
தேர்தல் மோசடி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட நாடகம். தேர்தல் ஆணையத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இந்த மோசடியிலிருந்து தப்பிக்க விரும்பினால் அது நிச்சயம் நடக்காது. காங்கிரஸ் கட்சி அதைப் பார்த்துக்கொண்டு இருக்காது.
இந்தியாவில் வாக்குகள் திருடப்படுவதாகவும், கர்நாடகத்தில் வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெற்றது என்பதைத் தனது கட்சி கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.
பிகாரில் நடந்துவரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டபோது, தேர்தல் அதிகாரிகள் இதுவரை 52 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் முகவரிகளில் இல்லை என்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து ராகுல் இந்த கருத்துளை வெளியிட்டுள்ளார்.
பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிகாரில் வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது கட்சி போராடி வருவதாகவும் அவர் கூறினார்.