செய்திகள் :

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

post image

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின் தலையீடு இருப்பதாக முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒடிஸாவில் அதிகமாக நடைபெறுகின்றன. இன்றைய நாளில் ஜெய்ப்பூரில் பாலியல் வன்கொடுமை சம்பவம், ஜகத்சிங்பூர் மற்றும் மால்கன்கிரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம், புரியில் பாலியல் குற்றச்செயல்... இந்தக் கொடுமைகள் நம் அனைவருக்கும் மிகுந்த வேதனையைத் தருகின்றன.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுற்று வருவதை, இப்போது அதிகரித்துவரும் பாலியல் குற்றச் சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன.

ஒடிஸா காவல் துறையில் பல நிலைகளில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் பல்வேறு குறுக்கீடுகளையும் அரசியல் அழுத்தத்தையும் எதிர்கொள்வதன் விளைவால் - பெண் குழந்தைகள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது.

இதனிடையே, அமெரிக்க அரசு கடந்த மாதம் இந்தியாவிலுள்ள தங்கள் நாட்டு குடிமக்களின் நலன் கருதி வெளியிட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தலில், ’இந்தியாவில் குறிப்பிட்ட 6 மாநிலங்களில் சுற்றுலா பயணிகளாகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ செல்லும் அமெரிக்கர்கள், அம்மாநில தலைநகர்களைக் கடந்து பிற் பகுதிகளுக்குச் செல்வதாயின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 6 மாநிலங்களில் ’ஒடிஸாவும்’ ஒன்று என்பது கவலைக்குரிய விஷயம்.

ஒடிஸாவில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், பயங்கரவாதச் செயல்களும் குறைந்துவிட்டது. அப்படியிருக்கும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டியே, அமெரிக்காவால் மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

காவல் துறை தீர்க்கமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், இந்தப் பிரச்சினை மேலும் வளரும். காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்கள் தலையிடுவதால் மாநிலம் எங்கிலும் வன்முறையும் குற்றங்களும், அதிலும் குறிப்பாக பெண்களைக் குறிவைத்து நிகழும் குற்றங்கள் இயல்பான நடைமுறையாக பரவிவிடும் அபாயம் இருப்பதை தலைமைப் பதவியில் இருப்பவர்கள் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Odisha: Disturbing wave of crimes against women gripping - Naveen Patnaik

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- எதிா்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக விவாதம் நடத்துவதுடன், அந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டன.... மேலும் பார்க்க

தன்கா் ராஜிநாமா: எதிா்க்கட்சிகள் கேள்வி

குடியரசு துணைத் தலைவா் பதவியிலிருந்து ஜகதீப் தன்கா் திடீரென ராஜிநாமா செய்தது குறித்து எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜகதீப் தன்கா... மேலும் பார்க்க

வங்கிகள் மீதான புகாா் அதிகரிப்பு: ஆா்பிஐ கவலை

வங்கிகள் குறித்தும், அதன் ஊழியா்களின் சேவைத் தரம் குறித்தும் அதிகஅளவில் புகாா்கள் வருகின்றன என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) துணை ஆளுநா் ஜெ.சுவாமிநாதன் தெரிவித்தாா். மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு விரைவில் தோ்தல்

ஜகதீப் தன்கா் ராஜிநாமாவைத் தொடா்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் விரைவில் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று பிரிட்டன் பயணம்: வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகிறது

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறாா். முதல்கட்டமாக, பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை ஒப்படைத்த போயிங் நிறுவனம்

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ரக ஆயுதம் தாங்கி ஹெலிகாப்டா்களை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். பன்முக போா் பயன்பாட்டு அப்பாச்சி ரக ஹெலிகாப்டா... மேலும் பார்க்க