செய்திகள் :

அஜர்பைஜான் விமான தாக்குதல்: மன்னிப்புக் கோரினாரா புதின்?

post image

கடந்த 26-ம் தேதி அஜர்பைஜானைச் சேர்ந்த விமானம் ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு வரும் வழியில் திசைமாறி, கஜகஸ்தானில் விழுந்தது. இந்த சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளின் தாக்குதலே காரணம் எனக் கூறப்படுகிறது. ரஷ்ய அரசு விமானத் தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நிலையில், விமானம் தாக்கப்பட்ட நாளில் ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.

ரஷ்ய அதிபர் வேட்பாளர் விளாதிமிர் புதின்!

அஜர்பைஜான் தலைவர் இல்ஹாம் அலியேவ்விடம் நடந்த சோகமான நிகழ்வுக்காக புதின் மன்னிப்புக் கேட்டதாக ரஷ்யா (Putin) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்யா இராணுவத்தால் விமானத்தை சுடப்பட்டதாகக் கூறப்படவில்லை.

ரஷ்ய தரப்பில் இப்போதுவரை உக்ரைன் ட்ரோன்கள்தான் விமானத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அலியேவ் ரஷ்யாவின் மீதான வெளிப்புற தலையீடே நடைபெற்ற சம்பவத்துக்கு காரணம் என உறுதிபடுத்தியிருக்கிறார். இதனால் ரஷ்யா-அஜர்பைஜான் இடையே ராஜாந்திர ரீதியான முரண்கள் இல்லை. எனினும் அஜர்பைஜான் மக்களிடையே ரஷ்யா தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற குரல் எழுந்திருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று க்ரோஸ்னி மொஸ்டோக் மற்றும் விளாடிகாவ்காஸ் ஆகிய பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. அதற்கு ரஷ்ய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் விமானம் பலமுறை க்ரோஸ்னியில் தரையிறங்க முயற்சித்திருக்கிறது என புதின் அலியோவிடம் தெரிவித்துள்ளார்.

"ரஷ்யாவின் வான் பரப்பில் நடந்த இந்த சோகமான சம்பவத்துக்கு புதின் மன்னிப்புக் கோரினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணகுணமடைய பிராத்திப்பதாக கூறினார்" என ரஷ்யாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

ரஷ்ய அதிபர் புதின்

அஜர்பைஜான் அரசு தரப்பில், 'விமானத்தில் இருக்கும் துளைகள் மற்றும் பிற சாட்சியங்களின் மூலம் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் எதுவுமில்லை, தாக்குதல் நடந்திருப்பது உறுதி' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த நாட்டின் ஆயுதங்கள் தாக்கியிருக்கக்கூடும் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.

உயிர்பிழைத்தவர்கள் கடைசி நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தத்தைக் கேட்டதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ரஷ்யா பொய் சொல்வதாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து மன்னிப்புக்கோரச் செய்ய வேண்டும் என அஜர்பைஜானிடம் பிற நாடுகள் முறையிட்டுள்ளன.

ஹிட்லிஸ்டில் Duraimurugan, டெல்லி விசிட், திகிலில் Annamalai? | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் அதிரடி ரெய்டை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை. இது டெல்லியின் ஸ்கெட்ச் என்கிறார்கள். அடுத்தடுத்து ஆறு அமைச்சர... மேலும் பார்க்க

முன்வரிசையில் அமர சண்டை; திமுக பெண் நிர்வாகிகளிடையே கைகலப்பா? நடந்தது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 02-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை பகுதியில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து... மேலும் பார்க்க

ED RAID - ஆளுநர் டெல்லி விசிட்; துரைமுருகன் மகனுக்கு செக்? | Anna University | DMK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED RAID... காரணம் என்ன? * வேலூர்: 'வீட்டுக்கு வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை' - அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன் * தமிழகத்தில... மேலும் பார்க்க

காட்பாடி: துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு... வெளியே டீ, சமோசா, சிக்கன் பிரியாணி.. மெனு விவரம்!

வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலையில் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதே வீட்டில் அவரின் மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் வசித்... மேலும் பார்க்க