செய்திகள் :

அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

post image

சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அஜித்குமார் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 18 காயங்கள் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை!

ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும். இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் வலிப்பு என எப்ஐஆர் பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.

விக்னேஷ் லாக் அப் மரணத்தின்போது ஸ்டாலின், எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை. நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்துதான் எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் அஜித்குமாருக்கு நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர். நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?

"ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; சிபிசிஐடி-க்கு மாற்றுகிறோம்" என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி, துளி கூட நம்பவில்லை!

முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள். போலீஸின் போலி எஃப்ஐஆர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்.

இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்! வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் முதல்வரே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has urged Ajith Kumar case to be transferred to CBI who died during the police investigation

அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை: நியாயப்படுத்த முடியாத தவறு - முதல்வர்

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்ப... மேலும் பார்க்க

நெகிழ்ச்சி சம்பவம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!

பிகாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.சுமார் 20 ஆண்டுகளாக மனநலப் பாதிப்பால் குடும்பத்தை விட்டுப்... மேலும் பார்க்க

காவல்துறை என்ற மனித மிருகங்கள்: திமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்!

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவலர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இருதயராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையால் ... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: அஜித்குமார் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் களங்கத்த... மேலும் பார்க்க