செய்திகள் :

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

post image

அஜித்குமார் ரேஸிங்கில் கார் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, கார் ரேஸிங்கிலும் தீவிரமாக ஈடுபாடுகாட்டி வருகிறார்.

பொதுவெளியில் அதிகமாக தலையைக் காட்டாமல் இருந்த நடிகர் அஜித்குமார், குட் பேட் அக்லி பட வெற்றிக்குப் பிறகு, சில மாதங்களுக்கு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகுவதாகவும் கூறியிருந்தார்.

இவரின், அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “நரேன் கார்த்திகேயனை அஜித்குமார் ரேஸிங்கிற்கு அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

அஜித் குமார்: நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது ஒரு கௌரவமானது. நரேனுடன் சேர்ந்து ‘ஆசிய லீ மான்ஸ்’ தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நரேன் கார்த்திகேயன்: எனக்கு அஜித்தை பல வருடங்களாகத் தெரியும். இப்போது அவர் தொழில்முறையில் கார் பந்தயத்தில் ஈடுபடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அவருடன் சேர்ந்து பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளனர்.

யார் இந்த நரேன் கார்த்திகேயன்?

உலகளவில் கார் பந்தய போட்டியின் மீது கவனமும் ஆர்வமும் இருந்தாலும் இதை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவராக நரேன் கார்த்திகேயன் பார்க்கப்படுகிறார்.

உலகளவில் பல கார் பந்தயங்களில் கலந்துகொண்டு ஃபார்முலா ஆசியா, சூப்பர் பிக்ஸ் கொரியா போட்டிகளில் முதலிடம் வென்று கார் பந்தயத்தில் இந்தியாவின் முத்திரையைப் பதித்த நரேன், 2005 ஆம் ஆண்டு ஜோர்டானில் நடைபெற்ற ஃபார்முலா - 1 பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றதுடன் அப்போட்டியில் 18 ஆம் இடம் பிடித்தார்.

சமீபத்தில், நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கையைத் திரைப்படமாக உள்ளதாகவும், இதை பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Naren Karthikeyan joins hands with Ajith!

இதையும் படிக்க :டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை, மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று(ஆக. 6) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கமல்ஹாசன் தன்னுடை... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை: முதல்வர் நாளை வெளியீடு!

தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஆக. 8) வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திமுக அரசு பதவியேற்ற பின்னர், 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்துக்கெனமாநிலக் கல்விக... மேலும் பார்க்க

கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு

சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இருவரது சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் ஐடி... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகின்றது.முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப... மேலும் பார்க்க

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

கலைஞரின் ஒளியில் ’எல்லார்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுகவின் முன்னாள் தலைவரும் தம... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் அரசு, தனியாா்கள் மூலம் 6.41 லட்சம் பேருக்கு வேலை -முதல்வா் மு.க.ஸ்டாலின்

நான்காண்டு திமுக ஆட்சியில் அரசு மற்றும் தனியாா்கள் மூலமாக 6.41 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின... மேலும் பார்க்க