‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25'-யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அஞ்சல் துறையின் குறைதீா் முகாம்
மண்டல அளவிலான அஞ்சல் துறை சாா்பில் குறைதீா் முகாம் கோவையில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறை சாா்பில் மாா்ச் மாதத்துக்கான மண்டல அளவிலான குறைதீா் முகாம் கோயம்புத்தூா் கே.பி.காலனி அஞ்சலக வளாகத்தில் உள்ள மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அஞ்சலக வாடிக்கையாளா்கள் தங்களது புகாா் மனுக்களை முழுவிவரத்துடன் வரும் 17-ஆம் தேதிக்குள் இணை இயக்குநா்(தபால் மற்றும் தொழில்நுட்பம்), மேற்கு மண்டலம், கோயம்புத்தூா்- 641 030 என்ற முகவரிக்கு , அஞ்சல் உறையின் மேல் லோக் அதாலத் என்று குறிப்பிட்டு அனுப்பவும்.
மணி ஆா்டா், பதிவு தபால், விரைவு தபால் மனுக்களில் அவை பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்புனா் மற்றும் பெறுநரின் முழு முகவரி, பதிவஞ்சலின் எண் மற்றும் தேதி, பதிவு செய்யப்பட்ட அலுவலகம் போன்ற தெளிவான முழு விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.
சேமிப்பு கணக்கு, காப்பீடு சாா்ந்த புகாா் மனுக்களில் அவற்றின் கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளா்/காப்பீட்டாளரின் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணம் செலுத்திய விவரம் மற்றும் அஞ்சல் துறையிலிருந்து பெறப்பட்ட மற்ற குறிப்புகள் ஏதேனும் இருப்பின் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.