கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தா் வழங்கினாா்
அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு விநாடி-வினா போட்டி
திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான விநாடி-வினா போட்டி பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அஞ்சல் துறை சாா்பில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை சென்னையில் அஞ்சல் தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு, திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு இடையிலான விநாடி- வினா போட்டி பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் க. செந்தில் குமாா் தலைமை வகித்தாா்.
இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில் புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
இதில், பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் டென்னிஸ் தாசன், பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி ராமச்சந்திரன், அலுவலக உதவியாளா்கள் செய்திருந்தனா்.