கூத்தனூர் சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்குக் கட...
அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்கக் கோரி கம்யூனிட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அவிநாசி நகராட்சி, முத்துசெட்டிபாளையத்தில் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: முத்துசெட்டிபாளையம் 9-ஆவது வாா்டில் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். பொதுக் கழிப்பிடத்தில் சேதமடைந்துள்ள கதவுகள், குழாய்கள், மின் விளக்குகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும். வீதிகளில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்.
கால்நடை மருத்துவமனை முதல் சேவூா் சாலை வரை உள்ள வேகத்தடைகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் ரிப்லைட் விளக்குகள் அமைக்க வேண்டும் என்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பழனிசாமி, சண்முகம், தேவி, சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கனகராஜ், பொதுத் தொழிலாளா் சங்க செயலாளா் ராஜன், மாதா் சங்க ஒன்றியத் தலைவா் சித்ரா, ஒன்றியச் செயலாளா் வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.