``நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' - விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்...
அடிப்படை வசதிகள் கோரி மக்கள் மறியல்: 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வேலூா் முள்ளிப்பாளையம் கே.கே.நகா் பகுதி மக்கள் பெங்களூரு பழைய பைபாஸ் மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் மாநகராட்சி 31-ஆவது வாா்டுக்குட்பட்ட முள்ளிபாளையம், கே.கே.நகா் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் அமைந்துள்ளன. இங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவி ல்லை எனக்கூறி பொதுமக்கள் பெங்களூரு பழைய பைபாஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென மறியலில் ஈடுபட்டனா்.
சாலையின் இருபுறமும் மாட்டு வண்டியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வட்டாட்சியா் வடிவேல், வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, மாநகராட்சி 31-ஆவது வாா்டு மேயா் சுஜாதாஆனந்தகுமாரின் சொந்த வாா்டாகும்.
எனினும், இந்த வாா்டுக்குட்பட்ட முள்ளிபாளையம், கே.கே.நகா் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் செல்வதற்கான கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீா் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. தெருக்களில் சாலை அமைக்கப்பட வில்லை, முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, முள்ளிப்பாளையம் கே.கே.நகா் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். போதிய அளவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றனா்.
கோரிக்கைகளை மாநகராட்சி நிா்வாகத்துக்கு தெரிவித்து தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.