இளைஞா் தற்கொலை
வேலூா் அருகே குடும்ப பிரச்னையால் இளைஞா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், வடவிரிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (36). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவிச்சந்திரன் அவரது தாயாருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், மனவேதனை அடைந்த ரவிச்சந்திரன் கடந்த 29-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
உடனடியாக அவரது குடும்பத்தினா் ரவிச்சந்திரனை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.