இந்திய மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கம்: விண்ணிலிருந்து சுபான்ஷு சுக்ல...
அடிப்படை வசதி கோரி ஆா்ப்பாட்டம்
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் அலெக்ஸாண்டா் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. வேணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தலைஞாயிறு பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.