பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்படைக்க நீதி ஆயோக், பிரதமரிடம்...
அடிமைக் கட்சியல்ல திமுக; யாருக்கும் அடிபணிய மாட்டோம்! - உதயநிதி ஸ்டாலின்
ஈ.டி.(அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்படமாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை, டாஸ்மாக் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, டாஸ்மாக் புகாரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்துதான் முதல்வர் தில்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதிலளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி,
"முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிதி உரிமையைக் கேட்பதற்காக தில்லிக்கு சென்றுள்ளார். ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். ED (அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம். மிரட்ட முயற்சித்தார்கள். மிரட்டி அடிபணிய வைப்பதற்கு அடிமை கட்சியல்ல திமுக. முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியார் கொள்கைகள் கொண்ட கட்சி. தப்பு செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. யாருக்கும் அடிபணியத் தேவையில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கோட்டா மாணவர்கள் தற்கொலை விவகாரம்: ராஜஸ்தான் துணை முதல்வர் என்ன சொல்கிறார்?