ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
அடுத்தகுடி வீரசக்தி அம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை
திருவாடானை அருகே அடுத்தகுடியில் அமைந்துள்ள வீரசக்தி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் பூக்குழி திருவிழா நடைபெறும். இதேபோல, இந்த ஆண்டு கடந்த 1-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனிடையே, உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் வியாழக்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிா், தேன், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகை மூலிகை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
