செய்திகள் :

அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்; 42 வீடுகள் தரைமட்டம் - திருப்பூரில் அதிர்ச்சி!

post image

திருப்பூர் கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் புளியந்தோட்டம் பகுதியில் சாயாதேவி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் 42 வீடுகள் தகர கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில், வடமாநிலத் தொழிலாளர்களும் மற்ற பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மதியம் 2:45 மணி அளவில் ஒரு வீட்டில் இருந்த சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய சிலிண்டர் வெடித்துள்ளது. தொடர்ந்து அருகருகே இருந்த வீடுகளில் வீட்டு சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்துள்ளது.

விபத்து

இதில் 42 வீடுகளும் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்தன. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு,வடக்கு தீயணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாடகைக்கு ஆசைப்பட்டு தகரக் கொட்டகைகளை சிறிது சிறிதாக வீடுகளாக அமைத்து வாடகைக்கு விட்ட நிலத்தின் உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நான்குக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி : தலைக்கேறிய மது போதை; பள்ளியில் விழுந்து கிடந்த ஆசிரியர் - சஸ்பெண்ட் செய்த அதிகாரி!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வையமலை பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 20 மாணவ - மாணவிகள் படித்து வரும் நிலையில், ஆவாரம்பட... மேலும் பார்க்க

சைக்கிளில் தாயத்து விற்ற பாபா வங்கிக்கணக்கில் ரூ.106 கோடி - மதமாற்றத்துக்காக வந்த பணமா?

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் மதமாற்றத்தில் ஈடுபட்ட ஜமாலுதின் என்ற சாங்கூர் பாபாவின் செயல்பாடுகளை மாநில தீவிரவாத தடுப்புப்படை தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர் லக்னோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்... மேலும் பார்க்க

போலி பில் தயாரித்து மோசடி: நடிகை ஆலியா பட்டிடம் ரூ.77 லட்சத்தை கையாடல் செய்த பெண் உதவியாளர் கைது!

பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பு மட்டுமல்லாது படத்தயாரிப்பு கம்பெனியும் வைத்திருக்கிறார். எடர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருக... மேலும் பார்க்க

ஆணவ (தற்)கொலை... அழுந்திக் கிடக்கிற ஆணவங்களை தலைதூக்க செய்யுமே..!

மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நாமக்கல் தம்பதியின் செய்தியை வாசிக்கையில், இரண்டு வகையில் மனம் கனத்துக்கொண்டிருக்கிறது. முதலாவதாக, இழந்துவிட... மேலும் பார்க்க

கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா(34). 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு நர்ஸ் பணிக்காகச் சென்றார். 2011-ம் அண்டு தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை... மேலும் பார்க்க

சென்னை: மனைவியைத் தன் வழிக்குக் கொண்டு வர கணவர் செய்த விபரீத செயல்; பதிலடி கொடுத்த பெண் ஐடி ஊழியர்

சென்னையைச் சேர்ந்தவர் ரம்யா (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் டீம் லீடராகப் பணியாற்றி வருகிறார். அப்போது பெங்களூருவில் உள்ள கொரியர் கம்பெனியில் சூப்பர் வைஸராக வே... மேலும் பார்க்க