உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது
போலி பில் தயாரித்து மோசடி: நடிகை ஆலியா பட்டிடம் ரூ.77 லட்சத்தை கையாடல் செய்த பெண் உதவியாளர் கைது!
பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பு மட்டுமல்லாது படத்தயாரிப்பு கம்பெனியும் வைத்திருக்கிறார். எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். ஆலியா பட் வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவரை தனது உதவியாளராக வைத்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டில் இருந்து 2024ம் ஆண்டு வரை வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் உதவியாளராக இருந்தார். அந்நேரத்தில் ஆலியா பட்டின் நிதி நிர்வாகம், படப்பிடிப்பு விபரம், பணம் வாங்குவது போன்ற வேலைகளை வேதிகா கவனித்து வந்தார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து செலவு, மீட்டிங் செலவு என பல்வேறு காரணங்களை கூறி போலி பில் தயாரித்து ஆலியா பட்டிடம் கையெழுத்து வாங்கி வேதிகா பணத்தை தனது தோழியின் வங்கிக்கணக்கிற்கு மாற்றினார். அதன் பிறகு அப்பணத்தை அங்கிருந்து தனது வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டார். இது போன்று 2022-24ம் ஆண்டு வரை போலி பில் தயாரித்து 76.9 லட்சத்தை வேதிகா அபகரித்துக்கொண்டார்.

இந்த மோசடியை ஆலியா பட் தாயார் சோனி ரஸ்தான் சமீபத்தில் கண்டுபிடித்தார். வேதிகா தயாரித்து கையெழுத்து வாங்கிய பில்கள் அனைத்தும் ஒரிஜினல் போன்று இருந்தது. இது குறித்து சோனி ரஸ்தான் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து வேதிகாவை தேடி வந்தனர். போலீஸார் தேடுவதை அறிந்து கொண்டு வேதிகா தப்பிச்சென்றார். அவர் தொடர்ந்து இடத்தை மாற்றிகொண்டே இருந்தார். முதலில் மும்பையில் இருந்து ராஜஸ்தானுக்கு தப்பிச்சென்றார். அதன் பிறகு அங்கிருந்து கர்நாடகாவிற்கு தப்பிச்சென்றார்.
பின்னர் அங்கிருந்து புனேவிற்கும் பின்னர் பெங்களூருக்கும் சென்றார். இதையடுத்து பெங்களூரு சென்ற மும்பை போலீஸார் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். ஆலியாபட் நடிகர் ஷாருக் கானுடன் சேர்ந்து கொண்டு டார்லிங் என்ற படத்தை தயாரித்தார். தற்போது தனது கணவர் ரன்பீர் கபூருடன் சேர்ந்து லவ் அண்ட் வார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.