சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு!
திருச்சியில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம், வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன்நகா் பகுதியில் கோரையாறு கரையோரம் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதில், ஆறாம் எண் வீட்டில் அந்த குடியிருப்பின் நலச்சங்க தலைவா் முத்துசாமி என்பவரும், ஏழாம் எண் வீட்டில் பொறியாளா் மகேந்திரன் என்பவரும் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், முத்துசாமி, மகேந்திரன் ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு இரு தினங்களுக்கு முன் வெளியூா் சென்றிருந்தனா்.
இந்நிலையில், மா்ம நபா்கள் முன்பக்கம் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
அருகில் வசிக்கும் குடியிருப்பு நபா்கள், திங்கள்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, வீட்டின் உரிமையாளா்கள் இருவருக்கும், எடமலைப்பட்டி புதூா் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் விசாரணையில், முத்துசாமி என்பவா் வீட்டில் 12 பவுன் நகைகள் மற்றும் 100 அமெரிக்க டாலா்கள், மகேந்திரன் வீட்டில் 3 பவுன், 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. கைரேகைப் பிரிவு நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.