செய்திகள் :

"அடுத்தது ஹைட்ரஜன் குண்டு; மக்களிடம் மோடியால் முகத்தைக் கூட காட்ட முடியாது" - ராகுல் பேச்சு

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது என்றும், அது தொடர்பான அணுகுண்டை வீசப்போகிறேன் என்றும் முன்பு தெரிவித்தார்.

அதன்படி, கர்நாடகாவில் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குமோசடி நடந்திருப்பதாக பகிரங்கமாக ஆதாரங்களை வெளியிட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் மீது அடுத்த அடியாக ஹைட்ரஜன் குண்டு வீசப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

பீகாரில் இந்தியா கூட்டணி நடத்திவந்த வாக்காளர் அதிகார யாத்திரையின் (Voter Adhikar Yatra) நிறைவு நாளான இன்று தலைநகர் பாட்னாவில் யாத்திரை முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பா.ஜ.க தலைவர்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

அணுகுண்டை விட பெரியது எதுவென்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அதுதான் ஹைட்ரஜன் குண்டு.

தயாராக இருங்கள், ஒரு ஹைட்ரஜன் குண்டு வருகிறது. மிக விரைவில், வாக்கு திருட்டு பற்றிய உண்மை வெளிவரும்.

அந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்த பிறகு, நாட்டு மக்களிடம் நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

‘vote chor, gaddi chhod’ முழக்கத்தை நான் இங்கு எழுப்பினேன், மக்களும் அதை முழங்கினார்கள்.

இப்போது அது சீனாவிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்காவிலும் மக்கள் அதைச் சொல்கிறார்கள்" என்று கூறினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் ஹைட்ரஜன் குண்டு பேச்சுக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பீகார் பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத், "அணுகுண்டு என்று அவர் அழைத்தது முட்டாள்தனமாக மாறிவிட்டது.

அணுகுண்டுகளுக்கும் ஹைட்ரஜன் குண்டுகளுக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார். அவரது நடத்தை கண்ணியமாக இருக்க வேண்டும்.

ரவிசங்கர் பிரசாத்
ரவிசங்கர் பிரசாத்

21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருப்பது வாக்காளர் பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்கள் தொடர்ந்து வாக்காளர் பட்டியலிலேயே இருக்க வேண்டுமா?

அவர் ஏன் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க மறுக்கிறார்? அவர் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.

மேலும், இதில் பொய் சொன்னால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவருக்குத் தெரியும்" என்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எ... மேலும் பார்க்க

`விஜய் கட்சி, அந்த 2 சமூக வாக்குகளை டார்கெட் செய்கிறது’ - 9 தொகுதிகளை அலசிய அமைச்சர் எ.வ.வேலு

செப்டம்பர் 3-ம் தேதியான நேற்று... வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தி.மு.க-வின் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை... மேலும் பார்க்க

GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்வதென்ன?

ஜிஎஸ்டி மாற்றம்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக... மேலும் பார்க்க

திமுக பெண் கவுன்சிலர் காலில் நகராட்சி ஊழியர் விழுந்த விவகாரம்! – 10 பேர் மீது வன்கொடுமை வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையேய... மேலும் பார்க்க