செய்திகள் :

அடுத்த 4-5 நாள்களில் கேரளத்தில் பருவமழை தொடங்கும்: ஐஎம்டி

post image

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை அடுத்த 4,5 நாள்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக் காலம் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த 4, 5 நாள்களுக்குள் மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் மே 27ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே கணித்திருந்தது.

எதிர்பார்த்தபடி கேரளத்தில் பருவமழை வந்தால், 2009ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தொடங்கியது போலவே இந்தாண்டும் இருக்கும். என்று ஐஎம்டி தரவுகள் தெரிவிக்கின்றன.

அடுத்த 4-5 நாள்களில் கேரளத்தில் பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த பருவமழையானது ஜூன் 1 ஆம் தேதி கேரளத்தில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதிக்குள் பல மாநிலங்களில் பருவமழை பொழியும். இது செப்டம்பர் 17ல் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15ல் முழுமையாக விலகும்.

கடந்தாண்டு மே 30ஆம் தேதியும், 2023ல் ஜூன் 8, 2022ல் மே 29, 2021 ஜூன் 3, 2020 ஜூன் 1, 2019 ஜூன் 8, 2018 மே 29 ஆகிய தேதிகளில் தென் மாநிலத்தில் பருவமழை தொடங்கியது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை 27ஆம் தேதிக்குள்ளும், அதன் பிறகு ஒரு சில நாள்களில் தமிழகத்தில் தொடர்ந்து பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 13 ரயில் நிலையங்கள்: பிரதமா் மோடி நாளை திறந்து வைக்கிறாா்

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 13 ரயில் நிலையங்களை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறாா். ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட... மேலும் பார்க்க

அமெரிக்காவைப் பின்பற்றி பாகிஸ்தானும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியத் தூதா் வலியுறுத்தல்

மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூா் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்ட நிலையில், பாகிஸ்தானும் அதனைப் பின்பற்றி ஹஃபீஸ் சையது, ஜக்கியுா் ரஹ்மான் லக்வி, சஜீத் மீா் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்பட... மேலும் பார்க்க

இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை: ஜெய்சங்கரிடம் நெதா்லாந்து பிரதமா் ஆதரவு

நெதா்லாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பிரதமா் டிக் ஸ்கூஃபைச் சந்தித்து பேசினாா். இச்சந்திப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்... மேலும் பார்க்க

ம.பி. உயா்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: கடைசி பணி நாளில் உச்சநீதிமன்றம் மீது அதிருப்தி

இந்தூா், மே 20: மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி துப்பல வெங்கட ரமணா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். தனது கடைசி பணி நாளில் மிகுந்த வேதனையுடன் உச்சநீதிமன்றம் மீது அவா் அதிருப்தி தெரிவித்தாா். மத்திய பி... மேலும் பார்க்க

வரவேற்பு நடைமுறை குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்

மகாராஷ்டிரத்தில் தன்னை வரவேற்பதற்கான நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தியுள்ளாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற... மேலும் பார்க்க

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க