முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!
அவிநாசி வட்டார அனைத்து விவசாயிகளும் மாா்ச் 15- ஆம் தேதிக்குள் அடையாள எண் பெறுவதற்கு வேளாண்மைத் துறையினா் அழைப்பு விடுத்துள்ளனா்.
இது குறித்து அவிநாசி வேளாண்மைத் துறையினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்குவதற்காக விவசாயிகளின் விவரங்களை சேகரிக்க ‘பாா்மா்ஸ் ரிஜிஸ்ட்டரி’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு விவசாயிக்கும் ஆதாா் எண் போன்றது.
ஆகவே, அவிநாசி வட்டார விவசாயிகள், தங்களது ஆதாா் அட்டை, நிலப்பட்டா, சிட்டா ஆகியவற்றுடன் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு கிராம வேளாண்மை விரிவாக்க அலுவலா்கள் சத்யா 99447-45106, சுஜி 96779-62699 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.