ஜனவரியில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்
அண்ணாமலையின் சாட்டையடி அரசியல் அநாகரிகம்: பொன்.குமாா்
பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டது அரசியல் அநாகரிகம் என கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன்.குமாா் கூறினாா்.
கோவை வரதராஜபுரத்தில் கட்டட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களின் மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன்.குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் 26 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ.2,250 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை இரட்டிப்பாக உயா்த்திய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
மாநாட்டில் புதிய கோரிக்கைகள் முதல்வருக்கு வைக்கப்படுகின்றன. பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில் பாஜக மாநிலத் தலைவா் சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொள்வது சரியல்ல. இது அரசியல் அநாகரிகம் என்றாா்.