உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.
அண்ணா பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அந்தப் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாரும், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும் பல்கலைக்கழகத்தில் சோதனை செய்தனா்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால், வதந்தியைப் பரப்பும் நோக்கத்தில் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டது தெரியவந்தது. கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.